காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்பூ .இது தேர்தல் நீரால் என்பதால் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார் , கர்நாடகத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஜனதாதளம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன . இந்நிலையில் திரை பிரபலங்களின் பிரச்சாரம் கர்நாடகாவில் களைகட்டி உள்ளது .

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தமிழர்கள் வாழும் பகுதிகளில் குஷ்பூ திறந்த வாகனத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார் .அப்போது குஸ்புவை பார்க்க பழைய ரசிகர்கள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கூடினர் .இதனால் இந்திராநகர் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது , சுமார் அரைமணி நேரம் பிரச்சாரம் செய்து விட்டு காரை நோக்கி சென்ற நடிகை குஷ்பூவை பின்தொடர்ந்து ஏராளமானோர் ஓடி வந்தனர் .

அப்போது ஒருவர் குஸ்புவை தவறான இடத்தில அழுத்தினார் , உடேன கொந்தளிப்புடன் பின்னால் திரும்பிய குஷ்பூ தவறாக அழுத்திய அந்த நபரை கன்னத்தில் பளார் பளார் என அறைந்தார் .அதை அருகில் இருந்து பார்த்த காங்கிரஸ் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர் பயங்கர கோஷத்தோடு சத்தம் எழுப்பி கொண்டிருந்த தொண்டர்கள் அமைதி ஆனார்கள் . குஷ்பூவிடம் பளார், பளார் என அடிவாங்கிய நபரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர் , மேலும் குஷ்பூ அறைந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here