நெட்டிசன்களின் கலாட்டா அதிகரித்து கொண்டேதான் செல்கிறது. கருத்து சுதந்திரம் நிறைந்த நம் நாட்டில் தற்போது இணையத்தின் பயன்பாடு எகிறி வருகிறது. அந்த வகையில் அரசியல்வாதிகளின் எந்த ஒரு செயலுக்கும் உடனடியாக பதிலடி கொடுக்கின்றனர் நெட்டிசன்கள். அந்த வகையில் இப்போது இவர்கள் நடத்தியுள்ள ரவுசு வெடியை பாருங்க.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சேகுவேரா மற்றும் பிடல் காஸ்ட்ரோ படங்களில் மார்பிங் செய்து இணையத்தில் உலா விட்டு அதகளம் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.

அதிமுக அமைச்சர்கள் ஏதாவது கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினாலோ அல்லது பத்திரிக்கையாளர்களை சந்தித்து அந்த செய்தி வெளிவருவதற்கு முன்பே மீம்ஸ் போட்டு கலகலப்பை ஏற்படுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள். இப்படி வைத்து செய்யும் நெட்டிசன்களை கண்டு அரசியல்வாதிகளுக்கும் மனதிற்குள் ஒரு கலக்கம்தான். இதுதான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம எனர்ஜி பூஸ்ட் ஆகி விடுகிறது.

இப்படி அடிக்கடி மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சிக்கிக் கொள்வது அதிமுகவின் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்தான். மீம் கிரியேட்டர்களின் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார். அவர் எது கூறினாலும் உடனே மீம் கிரியேட் செய்து வைரல் ஆக்கி விடுகின்றனர். தற்போது அதேபோல் ஒரு மார்ப்பிங் படத்தை இணையத்தில் உலா விட்டுள்ளனர்.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் முதல்வர் மற்றும் துணைமுதல்வர் இருவரையும் மாறிமாறி புகழந்து தள்ளினார்.

அப்போது ‘சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போல தமிழக மக்களுக்காக போராடுபவர்கள் தமிழக முதல்வரும், துணைமுதல்வரும்’ என்று வர்ணித்தார். அதோடு விட்டாரா? “முதல்வரும், துணை முதல்வரும் இரட்டை இலையை மீட்டெடுத்து இரட்டைகுழல் துப்பாக்கியாக செயல்படுகின்றனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுபோதாதா நெட்டிசன்கள்… களத்தில் குதித்து கலக்கி விட்டனர். முதல்வர் மற்றும் துணைமுதல்வர் இருவரையும் சே குவேராவோடும் காஸ்ட்ரோவோடும் ஒப்பிட்டு பேசியது அன்றே பலரால் கேலி செய்யப்பட்டது. நெட்டிசன்கள் கைவண்ணத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரது படங்களையும் சே குவரா மற்றும் காஸ்ட்ரோ படத்தைப் போல மார்பிங் செய்து உலா விட்டுள்ளனர். இப்போது இந்த படம்தான் செம வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here