நாமக்கல்:
ஆணழகன் போட்டியில் சுங்கான் கடை கல்லூரி மாணவர் தேசிய விருது பெற்றுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நேஷனல் அமெச்சூர் பாடி-பில்டர்ஸ் அசோசியேஷன் மற்றும் வேர்ல்டு ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் தேசிய அளவில் ஆண் அழகன் போட்டி நடந்தது.

இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 46 பேர் கலந்து கொண்டனர். ஜூனியர் பிரிவில் சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரி மேலாண்மைத் துறையில் 2 ஆம் ஆண்டு பயிலும் மாணவர் ஜி.சரண் முதல் ஆறு வரிசையில் நான்காம் தரத்தை பெற்று தேசிய விருது பெற்றுள்ளார்.

இதையடுத்து தேசிய விருது பெற்ற மாணவர் சரணை கல்லூரித் தாளாளர் அருள்பணி. மரிய வில்லியம், முதல்வர் ஜோசப் சேகர், நிதி காப்பாளர் பிரான்சிஸ் சேவியர், உடற்பயிற்சி ஆசிரியர் தாமஸ் மத்தியாஸ், மேலாண்மைத் துறை தலைவர் ஆர்.பிரைட் ரெஜினால்ட் ராஜா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here