சின்னாப்பாளையம் கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் அடிக்கடி தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு அடிக்கடி ஆட்டம் போடுவதும் ஊதாரித்தனமாக சுற்றுவதுதான் இவரது முதல் பழக்கவழக்கம் .இதை பார்த்த ஊர்மக்கள் இவங்க அப்பன் பைனான்ஸ் தொழில் செய்து காசு சேர்கிறான் பையன் மது குடித்துவிட்டு கூத்தடிக்கிறான் என அனைவரும் கூறியதுண்டு.

இந்நிலையில் திருநாவுக்கரசு பாலியல் வழக்கில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளதால் ஊர் மக்கள் இன்னும் ஆவேசம் அடைந்துள்ளார். பையன் குடிகாரன்னு பார்த்தா இப்படி பல பெண்களின் குடியை கெடுத்துட்டானே இவன் என்றாவது ஒருநாள் விடுதலையாகி வந்தாலும் ஊர் பக்கம் விடமாட்டோம் என ஆவேசமாக கூறியுள்ளனர் . .

இந்த கிராமத்தை பொறுத்தவரைக்கும் இந்த வீட்டை சுற்றியுள்ள வீடுகளில் பெரும்பாலும் ஆள் இருக்க மாட்டார்கள் அதனால் யாரும் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார்கள் . இந்த பகுதியில் இருக்கும் ஒரு சிலரும் காலையில் வேலைக்கு சென்றால் ராதிருக்குத்தான் வீடு திரும்புவார்கள் இது திருவாகரசுக்கு வசதியா போச்சு . இப்படி பல பொம்பளைங்க வாழ்க்கயை சீரழித்துவிட்டானே . இவன் புத்திக்கு தகுந்த மாறிதான் இவன் பொண்டாட்டி இவனோட இல்லை .

கல்யாணம் ஆன சில மாதத்திலே மனைவி பிரிந்து சென்றுவிட்டாள் . தற்போது வேறு ஒருவனை திருமணம் செய்துக்கொண்டு அந்த பெண் பத்திரமாக உள்ளார் என கிராமத்து மக்கள் கூறியுள்ளனர் . மேலும் நல்லவேளை அந்தப்பெண் தப்பித்து விட்டார் . ஆனால் அப்பாவி பெண்களின் வாழ்க்கையில் இப்படி விளையாடிவிட்டானே இவனை நாங்க சும்மா விடமாட்டோம் என ஆவேசமாக கூறியுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here