சிங்கப்பூரில் வேலைபார்த்து வந்த உதயகுமார் மன்னார்குடியை சேர்ந்தவர் . இவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி மனைவியுடனான சில கருத்து வேறுபாட்டால் விவாகரத்து ஆகியதால் 2 – வது கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று மேட்டெர்மோனி மூலமாக மகாலட்சுமி என்ற பெண்ணை பார்த்துள்ளார் .திருச்சியை சேர்ந்த அந்த பெண்ணுடன் கடந்த 2017 – ஆம் வருடம் திருமணம் நடந்துள்ளது .

இரண்டாவது மனைவியான மகாலட்சுமியுடன் கொஞ்ச நாள் சந்தோசமாக வாழ்க்கையை நடத்திவிட்டு மறுபடியும் வேலை விஷயமாக திரும்பவும் உதயகுமார் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தான் கர்ப்பமாக இருப்பதாக போனில் கணவர் உதயகுமாருக்கு மகாலட்சுமி சொல்லியுள்ளார். அப்பாவாக போகிற சந்தோஷத்தில் தனது மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கவேண்டும் என்பதால் சொந்த ஊரான மன்னார்குடிக்கு வந்துள்ளார் .

அங்கு வந்த அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி மனைவி கொடுத்துள்ளார் . கர்ப்பமாக இருந்தாக சொன்ன மனைவி வீட்டில் இல்லை . மனைவியின் அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது . பக்கத்துக்கு வீட்டுக்காரர்களிடம் விசாரித்த போது சிங்கப்பூருக்கு சென்ற சில நாட்களிலே வீட்டிலிருந்த எல்லா பொருட்களையும் சுருட்டி கொண்டு மகா லட்சுமி எப்போதே கிளம்பி விட்டதாக சொன்னார்களாம் .

இதனால் அதிர்ச்சி அடைந்த உதயகுமார் உடனே தெரிந்த இடங்களில் தேடியுள்ளார் அனால் அவரால் மனைவியை கண்டுபிடிக்க முடியவில்லை .அதனை தொடர்ந்து மனைவியை காணோம் என்று போலீசில் புகார் கொடுத்துள்ளார் , இதனையடுத்து ஒருநாள் மனைவியின் பேஸ்புக்கை பார்த்த போது பல ஆண்களுடன் மகாலட்சுமிக்கு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது .

அதுமட்டுமில்லால் பல பேரிடம் கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் என சொல்லியதுடன் செக்சியாகவும் வார்த்தைகளை பதிவிட்டுள்ளார் .இதை பார்த்து உதயகுமார் பதறி போனாராம் மேலும் 15 ஆண்களுடன் கல்யாணம் ஆகி உள்ளது . 6 மாதத்திற்கு ஒரு கல்யாணம் அவர்களால் உருவான கருவை கலைத்தும் பிறகு உல்லாச வாழ்க்கையை அனுபவிக்கும் நோக்கத்தில் ஜோடியாய் பல ஆண்களுடன் இருக்கும் போட்டாக்களை பார்த்து தலை சுற்றி போனாராம் உதயகுமார் .

இதை அடுத்து தன்னை போலவே 15 பேரை ஏமாற்றிய பெண்ணை கண்டுபிடித்து தருமாறும் அவரிடமிருந்து தனது பணம் நகைகளை மீது தருமாறும் போலீசில் புகார் அளித்துள்ளார் . அப்போது திருச்சியில் உள்ள தனியார் மருத்துமனையில் கருவை கலைத்ததற்கான ஆதாரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார் .

மேலும் மகாலட்சுமி ஏமாற்றியது தொடர்பாக கோர்ட்டுக்கு போக இருக்கிறாரம் உதயகுமார் . தன்னை போலவே 15 பேரை ஏமாற்றியதற்கான ஆதாரம் என்கிட்டே இருக்கிறது என்றுள்ளார் .தற்போது ஆந்திராவில் செட்டிலாயக்கிருக்கும் மகாலட்சுமி இன்னும் எத்தனை பேரை ஏமாற்ற போகிறாளோ தெரியவில்லை . தற்போது யாரோ பெரிய பணக்காரர் ஒருவர் மகாலட்சுமி கிட்ட சிக்கி கொண்டதாக கேள்விப்பட்டேன் . இனிமேல் யாரும் ஏமாறக்கூடாது என்பதற்காக உடனே நடவடிக்கை எடுக்கணும் என செய்தியாளர்களிடம் உதயகுமார் கூறியுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here