ஜல்லிக்கட்டு போராட்டம் , பிக் பாஸ் என பிரபலமானவர் ஜுலி தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார் . இந்நிலையில் சமுக வலைத்தளங்களில் தன்னை பற்றி ஆபாசமாக கமெண்ட் செய்பவர்களை விமர்சனம் செய்து நடிகை ஜுலி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் . அதில் அவர் கூறியது

என்னை வேதனை படுத்துவதால் உங்களுக்கு என்ன கிடிக்கிறது , என்னை கெட்ட வார்த்தைகளால் கமெண்ட் செய்பவர்களுக்கு என்னால் என்ன நஷ்டம் ஏற்பட்டது , முடிந்து போன விஷயத்தை வைத்து இன்னும் என்னை மட்டம் தட்டுவது எந்த வகையில் நியாயம் ,மேலும் நான் உண்டு என் வேலையுண்டு என உள்ளேன் என்னை எதற்காக வம்புக்கு இழுக்கிறீர்கள் , அவ்வளவு கெட்ட வார்த்தைகள் எதற்காக நானும் இந்த தமிழ்நாட்டில்தான் பிறந்தேன் , உங்களுக்கு நான் அக்கா , தங்கை மாதிரி அல்லவா , என்னை திட்டுவதால் சந்தோசம் கிடைக்கிறதா அல்லது நிம்மதி கிடைக்கிறதா அப்புறம் ஏன் !

நான் எனன தவறு செய்தேன் , வாழ்க்கையில் யாரும் பொய் சொல்லாதவர்களா அப்படி பொய் செல்லாதவர்கள் எனக்கு கமெண்ட் போடட்டும் , நீ என் பொய் சொன்னாய் என்று என்னால் யாரும் அழிந்து போகவில்லை . ஒரு பெண்ணை முதலில் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் . இது போல தவறாக பேசுவது தமிழர் பண்பாடு கிடையாது . ஒவ்வொரு முறையும் கெட்ட கமெண்ட்யை பார்க்கும் போது என் மனம் வேதனை அடைகிறது . என்னை தரமான கமெண்ட் மூலம் திட்டியவர்களுக்கு நன்றி அதை நான் வாசித்துள்ளேன் அதற்கேற்றவாறு என்னை மாற்றிக்கொள்வேன் . எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என ஆவேசமாக பேசியுள்ளார்

Just for those who don’t respect humanity and others feelings #filthycomments pic.twitter.com/j1nRZcdaHJ

— maria juliana (@lianajohn28) March 14, 2019

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here