[amazon_link asins=’B078KTZFN7,B07G39YZV8,B0761T4XKY,B07FHRFT2J,B07MCZTXZ4,B07KJ55X1R’ template=’ProductCarousel’ store=’evergreenmedi-21′ marketplace=’IN’ link_id=’ed4a5779-9ec0-426a-b28d-1aab1cf9c582′]

இப்படி ஒரு சம்பவத்தை கற்பனை பண்ணிக்கூட பார்த்ததில்லை . பொள்ளாச்சி சம்பவம் காரணமாக திமிழக மக்கள் 2 நாளாக உச்சகட்ட ஆத்திரத்தில் உள்ளனர் .இப்படிப்பட்ட பிள்ளைகளை பெற்றவர்கள் யாரோ ? ஒழுங்காக வளர்க்க தெரியாமல் கண்டிக்க தெரியாமல் இந்த லட்சணத்தில் வளத்திர்க்கார்களே என்று ஒவ்வொரு குடும்பத்திலும் மக்கள் நொந்து கொண்டு வயிறு எரிந்து கிடக்கிறார்கள் .

இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருநாவுக்கரசு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் . அவரை ஜாமினில் விடுதலை செய்யக்கோரி அவரின் தாய் லதா பொள்ளாச்சி ஜெஎம்எண் 1 கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் .ஆனால் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் இந்த வழக்கில் வக்கீல்கள் யாருமே ஆஜராகாவில்லை . இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது அதனால் லதாவும் இன்று கோர்ட்டுக்கு வந்தார் .

மகனுக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்று கோர்ட் விளாகத்திலே காத்திருந்தார் ஆனால் நீதிபதி ஆறுமுகம் ஜாமீன் வழங்க முடியாது என கண்டிப்புடன் உத்தரவுவிட்டார் . இதற்கிடையில் கோர்ட் விளாகத்தில் வந்திருந்த பொதுமக்கள் . “உன் பையன் இப்படி செய்துட்டானே என்று லதாவை பார்த்து நேரடியாகவே பேசியதாக தெரிகிறது .

மேலும் பொதுமக்கள் கெட்டவார்த்தைகளால் லதாவை திட்ட ஆரம்பித்தனர் டென்ஷன் ஆன லதா “யார் தப்பு செஞ்சது என் பையனா ? என் பையன் எந்த தப்பும் பண்ணல அவன் செல்போனில் எத்தனை பொண்ணுங்க போட்டோ இருக்கோ அந்த பொண்ணுங்களை பிடித்து முதல்ல விசாரிங்க ” எண் பையன் மேல போட்டது பொய் கேஸ் என்று கூச்சல் போட்டார் இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது . .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here