மும்பை:
கதி கலங்க வைக்கிறது… இதயத்தின் துடிப்பை சில விநாடிகள் நிறுத்தியே விடுகிறது என்று கூறினாலும் மிகையில்லை. அந்தளவிற்கு நடந்துள்ள ஒரு திக்…திடுக்… சம்பவம்.

மும்பையில் அபார்ட்மெண்ட் பகுதியில் நடந்த இந்த அதிர்ச்சி கொடுக்கும் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இப்போது இணையத்தில் வைரலாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் யாராக இருந்தாலும் தங்களை அறியாமல் கத்தி விடும் நிலைதான்.

சிறுவன் ஒருவன் மீது கார் ஏறியது கூட தெரியாமல் வேகமாக ஒரு பெண் காரை ஓட்டிச் செல்லும் வீடியோதான் அது. ஆனால் அந்த சிறுவனுக்கு அதிர்ஷ்ட தேவதையின் பார்வை இருந்திருக்க வேண்டும். சிறு காயங்கள் கூட இல்லாமல் காரின் அடியில் இருந்து எழுந்து ஓடிவிடுகிறான். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைதங்களில் வைரல் ஆகி வருகிறது.

கார் சிறுவன் மேல் ஏறி இறங்குவது கூட தெரியாமல் அந்தப் பெண் காரை ஓட்டுகிறார். நன்கு கவனித்து பார்த்தால் அந்த காரின் இடது கதவு கூடச் சாத்தப்படவில்லை என்பது தெரிகிறது. அப்படி அந்தப் பெண்ணிற்கு என்ன அவசரமோ… அல்லது நிதானத்தில் இல்லையா என்பதும் தெரியவில்லை. இந்த பதற வைக்கும் வீடியோ அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இப்போது இந்த வீடியோதான் இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இதய துடிப்பை எகிற அடித்து வருகிறது.

சிசிடிவி கேமராகள் இன்றைய நிலையில் போலீசாருக்கு நண்பனாக விளங்குகிறது. கொலை, கொள்ளை, விபத்து என்று அனைத்துக் குற்றங்களுக்கும் நேரடி சாட்சியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here