இன்று குடியரசு தலைவர் மாளிகையில் 112 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது . இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ,துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் . மேலும் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு விருதினை பெற்றனர் .

குறிப்பாக நடிகர் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதும் , நடிகர் பிரபுதேவா , பாடகர் சங்கர் மகாதேவன் , டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டோருக்கு பதமஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது .இதில் பதமஸ்ரீ விருதை வாங்க நடிகர் பிரபுதேவா , தமிழர்களின் கலாச்சார உடையான வேட்டி சட்டை அணிந்து வந்தார் . மேலும் தன்னுடைய தாய் தந்தையாருடன் இவர் விருதுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமுக வலைதளத்தில் வைரலாகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here