கேரளா மாநிலம் ஆலப்புழா அருகே காயங்குளம் பகுதியை சேர்ந்தவர் 60 வயது டீவி சீரியல் நடிகை . ஏராளமான டீவி சீரியல்களில் நடித்து வரும் இவர் காயங்குளம் போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார் .அதில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஜியா (37 ) என்பவருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது . நாளடைவில் நெருங்கி பழகினோம் எனக்கு அவர் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்தார் .பின்னர் அவர் என்னை மிரட்டி கொச்சியில் உள்ள ஓட்டலில் காயங்குளத்தில் உள்ள எனது வீட்டிலும் பலமுறை பலாத்காரம் செய்தார் .

அதை வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியதோடு சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டார் .அதோடு எனது கணவருக்கும் அந்த விடியோவை அனுப்பினார் .இதனால் எனது வாழ்ககை சீரழிந்துவிட்டது .ஆகவே ஜியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார் .போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர் .விசாரணையில் ஜியா இரண்டு வாரங்களுக்கு முன்பு துபாய்க்கு தப்பி சென்றது தெரிய வந்துள்ளது .

போலிசார் இப்போதைக்கு வலைத்தளங்களில் பயங்கர வேகமாக பரவிவரும் அந்த நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விடீயோக்களை கைப்பற்றியுள்ளனர் . 61 வயது டீவி நடிகை 37 வயது இளைஞர் மீது பலாத்கார புகார் கூறிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here