இன்றைய இளைய தலைமுறைகளின் பழக்க வழக்கம் அதிகளவில் மாறியே போய்விட்டது என்றே கூறலாம். காரணம் அவர்களுக்கு உற்றத் தோழனாக உள்ளது ஸ்மார்ட் போன்கள்தான். சரிங்க. இப்படிப்பட்ட மாறிப்போன பழக்கத்தால் நம் உடல் ஆரோக்கியம் உருக்குலைகிறது என்பது தெரியுங்களா?

காலையில் எழுந்தவுடன் செய்யக்கூடாதவற்றை தெரிந்து கொள்ளுங்கள். இப்போது சிறுவர்கள் முதல் இளம் பெண்கள் வரை சரியான முறையான பழக்கம் வழக்கம் இல்லாமல் ஏனோ தானோவென்று செயல்படுகின்றனர். இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. உடல் பலவீனமாகிறது.

காலை தூக்கத்தில் இருந்து எழும் போது நமது கண்கள் மிகவும்ட சோர்வுடையதாக இருக்கும். அப்போது ஸ்மார்ட் போன்களை எடுத்த பார்க்க கூடாது. வாட்ஸ் அப், பேஸ் புக் போன்றவற்றை ஆராயக்கூடாது. அவ்வாறு செய்யும் போது செல்போனின் அதிகளவு பவர் கண்களை தாக்கும் என்பதை உணர்ந்த கொள்ளுங்கள். இது உங்கள் கண்களை மோசமான விளைவை சந்திக்க செய்து விடும். எனவே காலை எழுந்தவுடன் ஸ்மார்ட்போனை பயன்படுத்தக்கூடாது.

இதேபோல் எழுந்தவுடன் வெந்நீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். எழுந்து 20 நிமிடங்களுக்கு பின்னரே குளிக்க்ச செல்ல வேண்டும். அதுவும் குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வேண்டும், சூடான நீருடன் அல்ல. இது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

அடுத்தது மிக முக்கியமான ஒன்று. சிலர் படுக்கையில் இருந்து எழும் போதே டீ மற்றும் காபியை குடித்த பின்னரே படுக்கையை விட்டே நகர்வார்கள். இது மிகவும் தவறான பழக்க வழக்கம். காலையில் வெறும் வயிற்றில் டீ குடிக்க கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பல் துலக்கி பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரை குடித்து விட்டு பின்னர் சிறிது நேரம் சென்ற பின்னரே டீயோ. காப்பியோ குடிக்க வேண்டும். இதுதான் சரியான அணுகுமுறை. இதனால் உங்கள் ஆரோக்கியம் உயரும்.

இதை சரியாக பின்பற்றுங்கள் ஆரோக்கியத்தை உயர்த்திக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here