13 ஆண்டுகளுக்கு பின்னர் வருது சண்டகோழி-2. இதனால் வெகு எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் படம் அமைந்துள்ளதாக கோலிவுட் குயில்கள் கூவுகின்றன. அதற்கேற்றார் போல் படத்தில் இடம் பெற்றுள்ள கம்பத்து பொண்ணு பாடல் டீசர் ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு விஷால் – இயக்குனர் லிங்குசாமி கூட்டணியில் வெளியாகி அதிரிபுதிரி வெற்றிப்படமாக அமைந்ததுதான் சண்டகோழி. முக்கியமாக கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை அனைவரும் ரசித்தனர். 13 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இரண்டாம் பாகத்திற்காக மீண்டும் விஷால் – லிங்குசாமி கைகோர்த்துள்ளனர். படமும் கிடுகிடுவென்று எடுக்கப்பட்டு போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இது படம் விஷாலுக்கு 25-வது படம் என்பதாலும் எதிர்பார்ப்பு வெகுவாக எகிறியுள்ளது. பர்ஸ்ட் பார்ட்டில் நடித்த ராஜ்கிரணும் இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் நெகட்டிவ் ரோலில் வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி, அர்ஜை ஆகியோர் நடித்துள்ளனர். இதில் வரலக்ஷ்மி சரத்குமாருக்கு மிக முக்கியமான கேரக்டர் என்று சொல்றாங்க.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘பென் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து விஷால் தயாரித்துள்ளார். சண்டகோழி படத்தில் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது. செம ஹிட் அடித்தது. அதேபோல் இந்த படத்திலும் பாடல்கள் அருமையாக வந்துள்ளது என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதை நிரூபிப்பது போல் சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லர் மற்றும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் வெகுவேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் எகிற செய்யும் விதமாக படத்தில் இடம்பெறும் ‘கம்பத்து பொண்ணு’என்ற பாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடலின் டீசரில் கீர்த்தி சுரேஷின் நளினமாக டான்ஸ் அனைவரையும் கவர்ந்துள்ளது.

வரும் அக்டோபர் 18-ம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. விஷால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்காக எதிர்பார்ப்பு இன்னும்… இன்னும்… அதிகரித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here