பேட்ட படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ. ஆர் . முருகதாஸ் இயக்குகிறார் . இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் .முதலில் இப்படத்தில் கீர்த்திசுரேஷ் தான் நாயகியாக நடிப்பார் என கூறப்பட்டது .ஆனால் பின்னர் என்ன நடந்ததோ தீடிரென நயன்தாரா படத்தில் நாயகி என அறிவித்தனர் .

இடையில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது அதாவது ஆரம்பத்தில் இப்படத்தில் நாயகியாக கீர்த்திசுரேஷைதான் முருகதாஸ் ஒப்பந்தம் செய்துள்ளார் .ஆனால் ரஜினிகாந்த தான் இதில் தலையிட்டு நயன்தாரா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என கட்டளையிட்டாராம் . கஜினி பட சமயத்திலேயே நயன்தாராவுக்கும் , சமந்தாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு இருந்தாலும் , ரஜினி கேட்டதற்க்காக கீர்த்திசுரேசை நீக்கிவிட்டு நயந்தாராவை ஒப்பந்தம் செய்து இருக்கிறார் முருகதாஸ் .

மேலும் லைக்கா தயாரிப்பில் ஏற்கனவே நயன்தாரா கோ கோ
படத்தில் நடித்ததால் லைக்கா நிறுவனமும் நயன்தாராவை இப்படத்தில் ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்களாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here