பொள்ளாச்சியில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் 14 கிலோ மீட்டர் தொலைவில் சின்னப்பாளையம் என்ற கிராமத்தில் பண்ணை வீடு உள்ளது . இந்த பண்ணை வீட்டில் தான் திருநாவுக்கரசும் அவரது நண்பர்களும் மாணவிகளை மிரட்டி பாலியல் பலத்காரம் செய்து வந்தனர் . 10 க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மாலை 4 மணிக்கு அந்த பண்ணை வீட்டுக்கு சென்றனர் .

வீடு பூட்டி கிடந்ததை அடுத்து பண்ணை வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனையிட்டனர் . சுமார் அரைமணி நேரம் நடந்த சோதனையில் பாலியல் வீடியோ தொடர்பான ஆவணங்கள் மேலும் கட்டுக்கட்டாக ஆணுறைகளை வாங்கி வைத்திருந்தனர் .வீட்டை சுற்றிலும் ஏரளாமான ஆணுறைகள் கிடந்துள்ளன .

இந்நிலையில் இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் தகவல்களை போலீசார் வெளியிட மறுத்துவிட்டனர் . வழக்கு விசாரணையில் உள்ளதால் இது குறித்து எதுவும் சொல்ல முடியாது என்று இன்ஸ்பெக்டர் நடசேன் கூறியுள்ளார் .மேலும் குற்றவாளியில் ஒருவரான சதீஷ் என்பவரின் தந்தை பொள்ளாச்சி நகரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார் அந்த கடையிலும் போலீசார் சோதனை நடத்தினர் .

மேலும் இந்த வழக்கில் பல விஐபி களுக்கும் தொடர்பு உண்டு
என்று பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறிவருகின்றனர் இதனால் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது .மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 354 ( ஏ, பி ) 392 ( பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் வழிப்பறி , தகவல் தொழிநுட்ப அடிப்படையில் பாதிப்பு ஏற்படுத்துதல் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

இந்த கும்பல் பள்ளி மாணவிகளையும் பலாத்காரம் செய்திருப்பதாக கூறப்படுகிறது . இது தொடர்பாக தீவிரமாக விசாரித்தால் “போஸ்கோ” சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யமுடியும் . ஆனால் போலீசார் இதற்கான எந்த முயற்ச்சியும் எடுக்கவிலை . போலீசார் பெயரளவுக்கு வழக்கு பதிவு செய்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here