ப்ரோமோ வீடியோக்களே தெறிக்க விடுகின்றன. இதை பார்த்து நெட்டிசன்களும் செம குஷியாகி அடுத்த நாமினேஷன் ஆள் யாரு? வாங்கய்யா… வாங்க என்று வைச்சு செய்ய தயாராகி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சிதான் இப்போது டாக் ஆப் தமிழ்நாடு என்றே சொல்லலாம். என்ன ப்ரேமோ வீடியோ வெளியாகும். அதில் என்ன இருக்கும் என்ற சுவாரஸ்யமாக காத்திருக்க ஆரம்பித்து விட்டனர். இன்னும் ஒரே மாதம் தான் இருக்கிறது. யார் டைட்டில் வின் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பும், படபடப்பும் போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல பார்க்கும் ரசிகர்களுக்கும் பற்றிக் கொண்டுள்ளது.

அந்த வகையில் ஒரு ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில்
வீட்டில் உள்ள போட்டியாளர்களான ரித்விகா, பாலாஜி, மும்தாஜ், ஐஸ்வர்யா ஆகியோர் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கின்றனர். இதில் ரித்விகா. மும்தாஜை பார்த்து இந்த வீட்ல எல்லாரும் வேலை செய்யறாங்க. நான் மட்டும் கம்மியா வேலை செய்யறோம்னு தோன்றி இருக்கா? என்று கேட்கிறார்.

அதற்கு மும்தாஜ் இல்லை என்று பதில் சொல்கிறார். பின்னர் பாலாஜியை பார்தது ஐஸ்வர்யாவை உங்களுக்கு பிடிக்காது தானே என்பது போல கேட்க… பிடிக்காதுனு சொல்லல என்கிறார். பின்னர் பாலாஜி இது குறித்து மற்றவர்களிடம் குறை கூறி பேசுகிறார். இதை பார்க்கும் போது ஏதோ வீட்டில் நடக்க போகிறது. அல்லது இது ஏதாவது டாஸ்க்கா என்று நினைக்க வைக்கிறது.

பின்னர் ரித்விகா நீ தான் ஸ்ட்ராங்கான போட்டியாளர் ஆச்சே மக்கள் கிட்ட போய் ஜெயித்து விட்டு வரலாமே என கூறுகிறார். இதற்கு விளையாடலாம் என்று ஐஸ்வர்யா கூறுகிறார். இந்த வீடியோவை பார்த்ததில் இருந்து நெட்டிசன்கள் நீதான் தைரியமான ஆள் ஆச்சே வா நாமினேஷனுக்கு… நாங்க பாத்துக்கறோம் என கூறி வருகின்றனர்.

 

இப்படி தினம் தினம்… பரபரப்பை பற்ற வைத்து எகிறி அடித்து வருகிது பிக்பாஸ் 2.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here