கேரளா மாநிலத்தை சார்ந்த திருச்சூர் அருகே பத்தாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவி தேர்வு எழுத நேரம் ஆகிவிட்டதால் தான் வளர்த்து வந்த குதிரையில் பயணம் செய்து சரியான நேரத்தில் தேர்வு அறையை அடைந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது .

நன்கு பயிற்சிபெற்ற ஒருவரால் மட்டுமே இந்த அளவிற்கு பொதுவெளியில் குதிரையை ஓட்டி செல்லமுடியும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது . அதே வேளையில் சிறு மாணவி இந்த அளவிற்கு குதிரையை இயக்க கற்றுள்ளாரா என நினைக்கும்போது பெரும் ஆச்சிரயத்தை ஏற்படுத்துகின்றது .சாலை மார்க்கமாக குதிரையில் பள்ளி சீருடையில் முதுகில் புத்தகப்பையை வைத்து கொண்டு வேகமாக பறந்துள்ளார் சிறுமி .

படத்தில் ஹீரோ குதிரையில் வருவதுபோல் அனிமேஷன் செய்கின்றனர் .ஆனால் ஒரு பள்ளி மாணவி நிஜத்திலேயே ஹீரோயிசமாக குதிரையை ஒட்டி சென்ற கட்சியை பார்த்த மக்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சபாஷ் போட்டு வருகின்றனர் .

இந்த வீடியோ தற்போது உலக அளவில் வைரலாக பரவி வருகிறது . மேலும் யார் இந்த சிறுமி என்ற தேடலும் சமூக வலைத்தளத்தில் இடம் பெற்றுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here