சென்னை:
50 ஆண்டு காலமாக நான் சம்பாத்தித்து வைத்திருந்த நல்ல பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய புகைப்பட கலைஞர் பிரித்திகா மேனன் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார் நடிகரும், இயக்குனருமான தியாகராஜன்.

பொன்னர்சங்கர் படப்பிடிப்பின் போது, அப்படத்தின் இயக்குனரும், நடிகருமான தியாகராஜன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் புகைப்பட கலைஞர் பிரித்திகா மேனன் மீ டூ ஹேஷ்டேகில் புகார் தெரிவித்திருந்தார். தற்போது கோலிவுட்டை இந்த மீ டூ தான் பெரும் புயலாக சுற்றி வருகிறது.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நடிகர் தியாகராஜன் அந்த பெண்ணின் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
“பிரித்திகா மேனன் கூறியது அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டு. அவரது இந்த பதிவால் கடந்த 50 வருடங்களாக நான் சம்பாதித்த நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

யார் வேண்டுமானாலும், யார் மீதும் குற்றம் சாட்டலாம் என்ற நிலை ஆபத்தானது. ஒருவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்படும் போது, சம்பந்தப்பட்டவரிடம் விசாரித்துவிட்டு செய்தி வெளியிடுவது தான் பத்திரிகை தர்மம். இதை பத்திரிகைகள் கடைப்பிடிக்க வேண்டும்.

பிரித்திகா சொன்ன அந்த நாளில் பொன்னர்சங்கர் படப்பிடிப்பில் நாங்கள் அனைவருமே மிக பிஸியாக இருந்தோம். மூச்சுவிடக்கூட நேரமில்லாத அந்த சூழலில், நான் எப்படி அவருடைய ரூம் கதவை தட்டியிருக்க முடியும்.

அப்படியிருக்க அவர் ஏன் இப்படி குற்றஞ்சாட்டினார் என தெரியவில்லை. இதனால் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. பிரித்திகா மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போகிறேன். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அது குறித்து விசாரித்து வருகிறோம்.

விரைவில் அவர் மீது வழக்கு தொடரப்படும். இவ்வாறு தியாகராஜன் ஆவேசமாக தெரிவித்துள்ளார். மீ டூ சர்ச்சையில் முதல் முறையாக குற்றம் சாட்டப்பட்டவர் தெளிவாக களம் இறங்கி இருக்கிறார். இதனால் தியாகராஜனை கோடம்பாக்கமே அண்ணாந்து பார்க்கிறது. தன் மீது தவறில்லை என்பதை அவர் நிரூபிப்பார் என்று.

இந்த நிலையில் சமூகத்தில் மிக அந்தஸ்து உள்ள ஒருவர் மீது தவறான பாலியல் குற்றசாட்டை பெண் ஒருவர் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு இருந்ததால் , பேஸ்புக் நிறுவனம் தானாகவே முன் வந்து அந்த பெண்ணின் முகநூல் பக்கத்தை முடக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here