காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்திரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் , கேரளா மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் .வயநாடு தொகுதியில் கடந்த 4 ஆம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்தார் .இந்த நிலையில் ராகுல் நடத்திய ரோடு ஷோவில் அவரை கொல்ல முயற்சி நடந்து இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி இருந்தது .இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது .

அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதியில் மனுதாக்கல் செய்தபோது பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டன ராகுல்காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை . ரோடு ஷோவில் அவரை நோக்கி லேசர் கதிர்கள் வந்தன ,அமேதி கலெக்டர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்துவிட்டு வந்தபிறகு ராகுல் பத்ரிக்கையாளர்களை சந்தித்து பேசினார் அப்போதும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது .

சுமார் 7 தடவை அவர் மீது லேசர் கதிர் பாய்ந்தது நீண்ட தூரத்தில் இருந்து ரகசியமாக கடும் துப்பாக்கி மூலம் லேசர் குண்டை பயன்படுத்தி ராகுல் உயிருக்கு குறி வைத்திருக்கலாமோ ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது .எனவே இந்த விஷயத்தில் மத்திய உள்துறை உடனடி நடவடடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது .இதுகுறித்த கடிதம் ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியிருக்கிறது .

இதுகுறித்து கருத்துதெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம் ராகுலின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி எந்தவொரு கடிதம் காங்கிரஸ் கட்சியிடமிருந்து வரவில்லை .காங்கிரஸ் கட்சியின் புகைப்படக்காரர் ஒருவரது மொபைல் போனிலிருந்து பச்சை நிற ஒளி வெளிப்பட்டதாக சிறப்பு பாதுகாப்பு குழுவின் இயக்குனர் தெரிவித்தியிருக்கிறார் என உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here