பரபரப்பை கிளப்பி அரசியல் அரங்கில் அக்கப்போரை பற்ற வைக்க போகிறது தளபதியின் படம் என்ற தகவல்கள் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி இப்போது நடித்து வரும் படம் பற்றி பல்வேறு கதைகள், கிளைக்கதைகள் இணையத்தில் உலா வருகின்றன. தற்போது இதில் ஒன்றாக ஒரு கதை கிளம்பி உள்ளது. பாரீனில் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தில் பணியாற்றும் தளபதி எப்படி தமிழக அரசியல் களத்தின் உள்ளே வருகிறார். அப்புறம் எப்படி முதல்வர் ஆகிறார் என்பதுதான் கதையாம்.

பாரீனில் இருக்கும் போது தமிழக அரசியலில் நடக்கும் அக்கப்போர்களை கண்டு கொந்தளித்து களத்தில் குதிக்கிறாராம் தளபதி. இதனால் ஏற்படும் சிலபல போராட்டங்கள், பஞ்ச் டயலாக்குகளுக்கு பின்னாடி முதல்வர் நாற்காலியில் அமர்ந்து அவர் செய்யும் சீர்திருத்தம் தான் கதையாம்.

இதை அறிந்து தமிழக அரசியல் வட்டாரங்கள் இப்போவே எப்படி எதிர்ப்பை காட்டலாம்ன்னு யோசிச்சுக்கிட்டு இருக்காம். பார்ப்போம் என்ன நடக்க போகுதுன்னு. அடுத்த கலாட்டாவுக்கும், பரபரப்புக்கும் இப்போவே தயாராகிடுச்சு கோலிவுட் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here