நீண்ட இடைவேளைக்கு பிறகு பிரபுதேவா தமிழ் சினிமாவில் 2016ஆம் வருடம் ஏ எல் விஜய் இயக்கத்தில் “தேவி” என்கிற பெரிய வெற்றி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக திரும்பினார் இதை தொடர்ந்து பிரபுதேவாவிற்கு படவாய்ப்புகள் குவிந்தன..

2018ஆம் ஆண்டு பிரபுதேவாவிற்கு “குலேபகாவாலி” “மெர்குரி” மற்றும் “லக்ஷ்மி” என்று மூன்று படங்கள் வெளியாகின .. மேலும் பிரபுதேவா அவர்கள் இதை தொடர்ந்து “எங் மங் ஜங்க்” “சார்லி சாப்ளின் 2” “ஊமைவிழிகள்” என்று பிரபுதேவா அவர்களின் படங்கள் வெளியீட்டிற்கு தயாராக உள்ளன அது மட்டும் இல்லமால் “பொன்மணிக்கவேல்” “தேள்” மற்றும் “தேவி2” என்று வரிசையாக படம் நடித்து  கொண்டிருக்கிறார் .

தமிழ் நடிகர்களில் பிரபுதேவாவிற்கு ஹிந்தியில் ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் மற்றும் நடனஇயக்குனராகவும் பல வெற்றி படங்களை தந்தவர் ஆதனால் பிரபுதேவா அவர்களின் தமிழ் படங்கள் குறைந்தது நான்கு கோடிக்கு அங்குள்ள ஹிந்தி தொலைக்காட்சி நிறுவனங்களால் வாங்கப்படுகிறது ஆதனால் பிரபுதேவாவை வைத்து படம் எடுக்கும் தமிழ் தயாரிப்பாளர்கள் முதலீட்டில் பாதி பணத்தை ஹிந்தி டப்பிங் மூலம் எடுத்து விடுகிறார்கள் ஏன் என்றால் பிரபு தேவா இப்போது நடிக்கும் படங்கள் எல்லாம் ஐந்து கோடி முதல் ஆறு கோடி வரை தயாரிய்ப்பு செலவு தான் ஆகிறது சமீபத்தில் கூட யூடியூபில் ஹிந்தி டப்பிங்கில் குலேபகாவலி திரைப்படத்தை கோல்டமயின்ஸ் டெலிபிலிம்ஸ் என்கிற நிறுவனம்  வெளியிட்டது வெளியான  இரண்டு வாரங்களில் 12 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை செய்தது.

இப்படி பிரபுதேவா படங்களுக்கு ஹிந்தியில் இருக்கும் மிக பெரிய வியாபாரம் காரணமாக தமிழ் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு கொண்டு பிரபுதேவாவை அணுகுகிறார்கள் மாஸ்டர் அவர்களும் நடிப்பில் இரண்டாவது இன்னிங்ஸ் போட்டு கொண்டு இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here