நேற்று முன்தினம் காஸ்மீர் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாதி மத்திய ரிசர்வ் படையினர் மீது நடத்திய கொடூர தாக்குதலில் 40 – க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகியுள்ளனர் . இந்த தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அதீத பாதுகாப்பு ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது . எனவே மிக அதிகமான கூட்டங்கள் கூடும் இடங்கள் போன்றவற்றில் பாதுகாப்பை முன்கூட்டியே ஏற்படுத்த முயன்று வருகினிறனர் .

இதன்படி உத்திரபிரேதசம் பிரயாகராஜில் வெகு சிறப்பாக கும்பமேளா நடந்து வருகிறது .இந்நிலையில் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு அனைவரும் அசம்பாவிதங்களை தடுக்கும் நோக்கில் தீவிரமாக செயல்பட்டு வருகின்ற்றனர் . கும்பமேளாவில் புனித நீராடி கொண்டிருக்கும் அணைத்து பக்தர்களையும் அதிகாரிகள் மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகின்ற்றனர் . மேலும் கூடுதல் படைகளும் குவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர் .

பக்தர்களை பாதுகாக்க அதிநவீன தொழில்நுட்பா கருவிகளை பயன்படுத்தி வருகின்ற்றனர் என கூறப்படுகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here