பொள்ளாச்சி மாணவி பாலியல் பலாத்கார வீடியோ தொடர்பாக விசாரணை நடத்த மாநில மகளிர் ஆணைய தலைவி “கண்ணகி பாக்கியநாதன்” தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று கோவை வந்தனர் . அப்போது கண்ணகி அளித்த பேட்டியில் மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து கலெக்டரிடம் இருந்து அறிக்கை வந்துள்ளது அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் . பெண் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார் .

அந்தவகையில் விசாரிக்க திட்டமிட்டுள்ளோம் . பொள்ளாச்சியில் அதிகளவில் இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பற்றி எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது புகார்களை அளிக்கலாம் . இந்த விஷயத்தில் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்க படுவாரக்ள்

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டது தொடர்பாக கோவை எஸ்பியிடம் விசாரணை நடத்தப்படும் . எஸ்பி கூறியது போல் இச்சம்பவத்தில் 4 பேர் மட்டுமே தொடர்புடையவர்கள் என விசாரணையை முடிக்க முடியாது .இந்த விவகாரத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களிடமும் தேவைப்பட்டால் ஆணையம் விசாரணை நடத்தும் . இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டுமில்லாது அவர்களது உறவினர்கள் , நண்பர்கள் என யார் வேண்டுமானாலும் சென்னையில் உள்ள அலுவலகத்தில் அல்லது 044 – 2855155 , 28592750 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here