பொள்ளாச்சி விவகாரத்தில் 400 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல் கசிந்துள்ளது .பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று அடித்து மிரட்டி அவர்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து பலரையும் கற்பழிக்க வைத்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது .

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .இதில் திருநாவுக்கரசு , சபரிராஜன் , சதீஷ் , வசந்தகுமார் உட்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர் .இந்த கும்பல் பல பெண்களை பேசி மயக்கி சீரழித்துள்ளனர் . அதை வீடியோ எடுத்து மீண்டும் மீண்டும் வன்புணர்வு செய்துள்ளனர் . இதில் திருமணமான பெண்களும் அடங்குவர் . இவர்கள் அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை பறித்துள்ளனர் .

அவர்கள் எடுத்த விடியோவை லேப்டாப்பில் பதிவு செய்து வைத்துள்ளனர் . மொத்தமாக 400 பெண்களுக்கு மேல் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் சுமார் 1500 விடியோக்கள் மேல் எடுத்துள்னனர் .

அதை ஒவ்வொருவரும் தங்களின் மொபைலில் பகிர்ந்து கொண்டுள்ளனர் .ஆனால் இந்த விவகாரம் வெளிய கசியவே அந்த விடியோக்களை அவர்கள் அளித்துவிட்டதாக தெரிகிறது . இந்த விவகாரத்தில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் மற்றும் விஐபிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here