பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200 க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு அதை விடியோவாக எடுத்து பெண்களை மிரட்டி வந்துளளனர் .ஏற்கனவே சில விடியோக்கள் வெளியான நிலையில் நேற்று வெளியான விடீயோவில் பார் நாகராஜ் பெண்களிடம் அத்துமீறுவது பதிவாகி இருந்தது . மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பாலா என்பவனும் நேற்று கைது செய்யப்பட்டான் .

இந்நிலையில் இவ்வழக்கு குறித்த அதிர்ச்சி தகவல் ஓன்று வெளியாகியுள்ளது அதாவது பெண்களின் விடியோவை ரூ. 40000 கொடுத்து ஒருவர் வாங்கி சென்றதாக தகவல் கிடைத்துள்ளது .அதாவது பெண்களிடம் அத்துமீறும் விடியோவை முக்கிய பிரமுகர் ஒருவர் ரூ. 40000 கொடுத்து வாங்கினாராம் . சுமார் 40 நிமிடங்கள் ஓடும் அந்த விடியோவை 4 நிமிடங்களாக சுருக்கி டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர் .

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் வீடியோ வெளியான பின்னர்தான் இந்த வழக்கு மிகவும் சீரியசாக கொண்டு செல்லப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here