மும்பை:
என்னம்மா… இப்படி செய்யறீங்களேம்மா… பெண்கள் பாதுகாப்பு பற்றி பெரும் பேச்சாக இருக்கும் இந்நேரத்தில் இப்படி செய்து அத்தனை பெண்களுக்கும் தலைகுனிவை ஏறப்டுத்தி உள்ளார் மாடல்  அழகி ஒருவர்.

அப்படி அவர் என்ன தான் செய்து விட்டார் என்கிறீர்களா? போதையில் செக்யூரிட்டியிடம் தகராறு செய்ய, அவர் போலீசை அழைக்க அப்போதும் அடங்காத அவர் தன் மேலாடைகளை அவிழ்த்துவிட்டு உள்ளாடையுடன் நின்று போலீசாருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளார். இதனால் அந்த குடியிருப்பு வளாகமே பரபரப்பை பற்ற வைத்துக் கொண்டுள்ளது.

மேகா ஷர்மா என்ற மாடல் தனது குடியிருப்புக்கு போதையுடன் சென்றுள்ளார். அங்கு செக்யூரிட்டியுடன் சண்டை போட்டு அவரை தாக்க… ரகளை ஸ்டார்ட் ஆகி உள்ளது. தாக்குதலுக்கு உள்ளான செக்யூரிட்டி உடனே போலீசாருக்கு தகவல் அனுப்பினார். உடன் அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த மாடல் அழகியுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு மேகா ஷர்மாவை போலீசார் அழைக்க, அவர் நான் நாளை காலை வருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு முற்றியுள்ளது. வெகுநேரம் வாக்குதவாதமும் ஏற்பட்டுள்ளது. இத்தனையும் லிப்டில் நடந்ததுதான் கொடுமை.

வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த மேகா தனது மேலாடையை கழற்றி விட்டு வெறும் உள்ளாடையும் நின்றார். இதனால் அந்த குடியிருப்பு வளாகமே பரபரப்பானது. பெண்களுக்கு பாதுகாப்பு பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் மாடல் அழகியின் இந்த செயல் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் உள்ளது. இப்படி செய்யலாமா?

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here