சிவகங்கை நேரு பஜாரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் .இவர் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் இவருடைய மகன் தமிழ்ச்செல்வன் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள மெடிக்கலில் பணிபுரிந்து வருகிறார் .இவர் நேற்று காலை 11 மணிக்கு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை புற்றுநோயாளிகள் பிரிவு மாடியில் நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து கொண்டிருந்தார் . .

அப்போது அங்கு வந்த ஒக்கூரை சேர்ந்த அருண்குமார் என்பவர் தமிழ்செல்வனுடன் தகராறு செய்தார் .பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார் . இதில் சம்பவ இடத்திலேயே தமிழ்ச்செல்வன் இறந்துள்ளார் .இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர் .தமிச்செல்வன் இறந்ததை தொடர்ந்து அருண்குமார் அவருடைய உடல் கிடந்த இடத்தின் அருகில் கத்தியுடன் உட்க்கார்ந்து விட்டார் .இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட தமிழ்செல்வன் , அருண்குமார் தாயாருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார் .இதை அறிந்த அருண்குமார் இருவரையும் கண்டித்துள்ளார் .இந்நிலையில் நேற்று அருண்குமாரின் தயார் வீட்டில் இல்லாததால் அவரை தேடி சிவகங்கைக்கு வந்தார் .அங்கு தனது தயார் குறித்து விசாரித்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . அதில் ஆத்திரமடைந்த அருண்குமார் தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் தமிழ்ச்செல்வனை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கயே உட்கார்ந்து விட்டார் .அருண்குமார் எலெக்ட்ரிஷியனாக வேலை செய்து வருகிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here