2018 இல் பல திரைப்படங்கள் வெளியாகி நல்ல விமர்சனங்கள் பெற்று வெற்றி வாகை சூடியது.அந்தப் படங்களில் அதில் நடித்த கதாநாயகிகளின் பங்கும் அதிகமாகவே உள்ளது.அவர்களில் பங்கும் ஒரு படத்தின் வெற்றிக்கு வழி வகுக்கின்றது.கதாநாயகிகளுக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்பட்ட வெற்றிப் படங்களும் தமிழ் சினிமாவில் பல உண்டு. டோரா, 36 வயதினிலே, அறம் போன்ற படங்களை எடுத்துக்காட்டாக கூறலாம்.

இத்தகைய நடிகைகளை கவுரவப் படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அந்த வருடத்தின் சிறந்த கதாநாயகியை வருடத்தின் முடிவில் தேர்வு செய்வர்.

இந்த வருடமும் சிறந்த கதாநாயகியை தேர்வு செய்யும் முன்னராக ஒரு சிறிய கருத்துக் கணிப்பை நடத்தியது “இந்தியா கிளீட்ஸ்”.அந்தக் கருத்துக் கணிப்பில் முன்னனி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் அகியோருடன் ஐஷ்வர்யா ராஜேஷை யும் வைத்து நடத்தப் பட்டது.அந்த கருத்துக் கணிப்பில் பல வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் “ஐஷவர்யா ராஜேஷ்”.

“நயன்தாரா” இரண்டாவது இடத்திற்கும், “த்ரிஷா” மூன்றாவது இடத்திற்கும் , “கீர்த்தி சுரேஸ்” நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here