இணையத்தளம் மூலம் அதிக வருமானம் ஈட்டியவர்கள் பட்டியலை “போர்ப்ஸ்” பத்திரிக்கை வெளியிட்டுள்ளது . இதில் வெறும் பொம்மைகளை குறித்து விமர்சனம் செய்யும் அமெரிக்காவை சேர்ந்த 7 வயது சிறுவன் “ரியான்” முதலிடம் பிடித்து அனைவைரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான் . கடந்த ஆண்டு சுமார் 70 கோடி ரூபாய் சம்பாதித்து எட்டாவது இடத்தில இருந்த சிறுவன் இந்த ஆண்டு 155 கோடி ருபாய் சம்பாதித்து பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளான்.

ரியானுக்கு 4 வயது இருக்கும் பொழுது “ரியான் டாய்ஸ் ரிவியூ” என்ற யூ டூப் சேனல் தொடங்கப்பட்து , இதில் சிறுவர்களின் விளையாட்டு பொருட்கள் குறித்து ” ரியான்” விமர்சனம் செய்து வருகிறார் .

இவர் அளிக்கும் விமர்சனம் பலரையும் கவர்ந்ததால் ஏராளமான விளையாட்டு பொருட்கள் பெரியளவில் விற்பனையாகின ரியானின் விடியோவை இதுவரை 2 .6 கோடி முறை யூ டூப் இல் பார்க்கப்பட்டுள்ளது .ரியானின் வீடியோ ஒளிபரப்பும் சேனலில் 1 .7 கோடி சந்தாதார்கள் உள்ளனர் , ரியான் விமர்சனம் செய்து வெளியிடும் விளையாட்டு பொருட்கள் வாயிலாக மட்டும் இந்த ஆண்டு 155 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளார் .

இவரை கவுரவிக்கும் வகையில் “ரியான் வேல்டு” என்ற பெயரில் பொம்மைகள் மற்றும் துணிகளை விற்பனை செய்ய வால்மார்ட் நிறுவனம் அண்மையில் ஒரு தனிப்பிரிவையே தொடங்கியுள்ளது .இதன் மூலம் அந்நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து வருவதாக வால்மார்ட் தெரிவித்துள்ளது ரியானுக்கு இப்பொழுது வயது ஏழு மட்டுமே என்பதால் இப்பணத்தை இப்பொழுது மொத்தமாக எடுக்க முடியாது . மொத்த பணத்தில் 15 விழுக்காடு இப்போது அவரது வங்கி கணக்கில் செல்லும் .அதை அவர் வளர்ந்த பின் எடுத்து கொள்ள முடியும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here