பொய் சொல்லும் போது கூட உண்மையை உளறிவிட்டான்… முடியாதவன்… என்று அவனே ஒத்துக் கொண்டுள்ளான் என்று அதிரடி பதில் கொடுத்து அலற விட்டுள்ளார் நடிகை கஸ்தூரி. எதற்காக தெரியுங்களா?

நடிகை கஸ்தூரியை அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அணுகி தங்கள் கட்சியில் இணையுமாறு வற்புறுத்தியதாக தகவல் வெளியானது.
ஆனால், நான் எந்த கட்சியிலும் இணையவில்லை என்று கஸ்தூரி மறுத்துவந்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் படத்தை டுவிட்டர் முகப்பில் வைத்துள்ள ஒருவர், #Metoo என்ற ஹேஸ்டேக் மூலம் கஸ்தூரி குறித்து தவறாக பேசியுள்ளார்.

 

அதில், கஸ்தூரி என்னை ஹோட்டல் அறைக்கு அழைத்து தொடும்படி கூறினார். அதற்காக பணம் தருவதாக சொன்னதாகவும் கூறினார். ஆனால் என்னால் முடியாது எனறு தெரிவித்து விட்டேன் என்று பதிவிட்டு இருந்தார்.

இதற்கு கடும் கண்டனங்களை ரஜினிகாந்த் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த நபர் ரஜினி ரசிகராக இருக்க முடியாது என்றும் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் அந்த நபருக்கு கஸ்தூரி டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை கஸ்தூரி அந்த பதிவில் கூறியிருப்பதாவது:

அட பொய் சொல்லும்போது கூட உண்மையை உளறிட்டான் பாருங்க. அவனால் முடியாதுதான். முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆக வேண்டும். ரஜினி பெயரை கெடுக்க இந்த மாதிரி எத்தனைபேர் அலைகிறார்களோ. இவ்வாறு அதிரடி பதிலடி கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here