அபிராமி மற்றும் மதுமிதாவை கலாய்க்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள்

பிக் பாஸ் வீட்டில் அபிராமி கோஷ்டிக்கும் , மதுமிதாவுக்குமான சண்டை இன்னும் ஓய்ந்த பாடில்லை அதைப்பற்றி தினமும் மதுமிதாவிடம் பலரும் சண்டை போடும் காட்சிகள் நடைபெற்று வருகிறது ,நேற்றுதான் இதுபற்றி இனிமேல் பேச வேண்டாம் என தற்போதைய கேப்டன் மோகன் வைத்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளார் .

இந்நிலையில் இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் அபிராமி மற்றும் மதுமிதா இடையிலான சண்டையை கலாய்த்து அவர்களை போலவே கவின் ,மோகன் வைத்தியா ,சரவணன் உள்ளிட்ட அனைவரும் பெண்கள் போல் உடை அணிந்து பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது