நடிகர் விஜய் சேதுபதியின் தனது அடுத்த படத்தின் புது தோற்றம்

‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய பின்னர், விதார்த் நடித்த ‘குற்றமே தண்டனை’, விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை இயக்குநர் மணிகண்டன் இயக்கியிருந்தார். ஆண்டவன் கட்டளை’ படத்திற்கு பிறகு மணிகண்டன் இயக்கவிருக்கும் அடுத்த படம் ‘கடைசி விவசாயி’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி துவங்கியது. தற்போது அப்படத்திலிருந்து சில புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதனை வைத்து, விஜய் சேதுபதி மனநலம் பாதித்த ஒருவராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது

மேலும் இந்த படம் அவரது தமிழ் சினிமா உலகத்தில் அவரை மேலும் ஒரு உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் என்பதில் என்ற மாற்று கருத்தும் கிடையாது .