ஜாங்கிரி மதுமிதாவுக்கு தீடிரென குவியும் நெட்டிசன் ஆதரவுகள்

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகையாக வலம் வந்தவர் “ஜாங்கிரி மதுமிதா” .இவர் தற்போது கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் .யார் சண்டைக்கு வந்தாலும் அல்லது வம்பிழுத்தாலும் சரிக்கு சரியாக நின்று சண்டையிடுகிறார் .இவருக்கும் அபிராமி ,ஷெரின் , சாக்சி அகர்வால் , வில்லி வனிதா ஆகிய நால்வரும் ஓன்று சேர்ந்து வம்பிழுத்தனர் .

ஆனால் சற்றும் அசராத மதுமிதா அவர்களுக்கு ஏட்டிக்கு போட்டியாக சத்தமில்லாமல் பேசி அந்த நால்வரையும் ஓட விட்டார் . இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நீ சிங்கம் மா , தமிழ் பொண்ணுன்னு நிருபிச்சிட்ட என அவரை பாராட்டி தள்ளி வருகின்றனர் . மேலும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவும் குவிந்து வருகிறது .

Leave a comment